உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த இருநாடுகளுக்கு இடையிலான போரில் ராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதற்கிடையில் போரை நிறுத்துமாறு ரஷ்யாவை பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றனர். எனினும் ரஷ்யா, உக்ரைன் மீதான ஆக்ரோஷமான போரை நிறுத்தாமல் நீடித்து வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படைகள் விரைவில் முன்னேற்றம் அடைவதற்கு தடையாக சீனாவினுடைய டயர்கள்உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது ரஷ்யாவின் போர் வாகனங்களில் தரமிக்க டயர்களை பொருத்துவதற்கு பதில், சீனநாட்டின் மலிவான டயரை ரஷ்ய இராணுவத்தின் ஊழல்அதிகாரிகள் வாங்கி பொருத்தியிருக்கின்றனர்.
இதனால் அந்த வாகனங்கள் போகும்போது கடினமான நிலப்பரப்பு மற்றும் சேற்றில் சிக்கிக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அந்த வாகனங்களை வெகு நாட்கள் வெயிலில் நிறுத்தும்போது டயர் கிழியவும் வாய்ப்பு இருக்கிறது. எனினும் உக்ரைன் படையினரோ நேட்டோ நாடுகள் வழங்கிய தரமிக்க வாகனங்களை பயன்படுத்துவதால் அவர்களால் எளிதில் முன்னேற முடிவதாக கூறப்படுகிறது.