Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நீ இந்த வீட்டை வச்சிக்கோ” பணமோசடி செய்த சகோதரர்கள்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

வாலிபரிடம் பண மோசடி செய்த 2  பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியில்  கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் அதே பகுதியில் வசிக்கும் சகோதரர்களான ரமேஷ், சுரேஷ் ஆகிய  2  பேர் தங்களுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அடமானத்தில் இருப்பதாகவும், அதனை மீட்டு  தாங்களே விலைக்கு வாங்கி கொள்ளுமாறு கூறியுள்ளனர். இதனை நம்பிய கோவிந்தராஜ் கடந்த 2018-ஆம் ஆண்டு 64 லட்ச ரூபாய் பணத்தை  ரமேஷ் மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேரிடமும் கொடுத்துள்ளார்.

ஆனால் பணத்தை பெற்று கொண்ட அவர்கள் வேறு ஒருவருக்கு வீட்டை விற்பனை   செய்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கோவிந்தராஜ்   காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த 2 பேரையும்  கைது செய்து நேற்று  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |