Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“கிராம சபை கூட்டத்தில் ஏற்பட்ட தகராறு” ஊராட்சி மன்ற தலைவரின் கணவருக்கு ஏற்பட்ட விபரிதம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை ….!!!!

 பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பாலபந்தல் கிராமத்தில் நேற்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கூட்டத்தில் வரவு செலவு கணக்கு மற்றும்  திட்டப்பணிகள் குறித்து பொதுமக்கள் கேள்வி கேட்டு கொண்டிருந்தனர். அப்போது  ஊராட்சி மன்ற தலைவரின் கணவரான திருமால் என்பவர் சில  பகுதியில் குப்பை கூட்டுவதில் ஊராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்படுகிறது எனவும், அதனை சரிசெய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதனால்  ஊராட்சி மன்ற  செயலாளர் தாமோதரனுக்கும்  திருமாலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திருமால் தாமோதரனின்  செல்போனை  தரையில் போட்டு உடைத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த  தாமோதரன் திருமாலை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த  திருமாலை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவரான  சரளா திருமால் பொதுமக்களுடன் சேர்ந்து திருக்கோயிலூர்-சங்கராபுரம் சாலையில் தாமோதரனை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |