காவல் துறையினர் சார்பில் தூய்மை செய்யும் பணி நடைபெற்றுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவெண்காடு பகுதியில் அமைந்துள்ள பூம்புகார் சுற்றுலா பகுதியில் நேற்று காவல்துறையினர் சார்பில் தூய்மை பணி நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவி, தி.மு.க. மாவட்ட பொருளாளர் ரவி, சீனிவாசா, ஆசிரியர் ரவி, மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தூய்மை பணியை தொடங்கி வைத்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த பூங்கா சுற்றுலா வளாகம் மிகவும் சிறப்புமிக்கது. எனவே உள்ளூர் மக்கள் அடிக்கடி வளாகத்தை தூய்மை செய்ய வேண்டும். இந்த பணிகளை காவல்துறையினர் சோதனை செய்ய வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.