Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு நடந்த கொடுமை…. ஆசிரியர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் உள்பட 2 பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கே.டி,சி நகரில் அருள் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டையில் இருக்கும் தனியார் பள்ளியில் இசை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அருள்ராஜ் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். இதனை அடுத்து ரெட்டியார்பட்டி மலை அருகே வைத்து அருள்ராஜ் அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதேபோல் மேலகுளம் பகுதியைச் சேர்ந்த பொன் கணேஷ் என்பவரும் ஆசை வார்த்தைகள் கூறி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்துள்ளது. இது குறித்து அறிந்த மாணவியின் பாட்டி பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அருள்ராஜ் மற்றும் கணேஷ் ஆக்ய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |