டீசரை பொருத்தவரை இந்த கார் மிக கம்பீர தோற்றம் கொண்டிருக்கும் என தெரிகிறது.இந்த காரின் முன்புறம் டிகோர் மாடலில் உள்ளதை போன்ற நோஸ் கிரில் தடிமனான க்ரோம் / சில்வர் பார்டெர்கள், மெல்லிய ஹெட்லேம்ப்கள், LED டேடைம் லேம்ப்களை வடிவமைக்கப்படுள்ளது . இந்த கார்ரின் முன்புறம் கம்பிரமான பம்பர் பொறுத்தப்படுள்ளது . இடது மற்றும் வலது புறம் ஃபிளேர்டு வீல் ஆர்ச்கள், சில்வர் ரூஃப் ரெயில்கள், மெல்லிய ORVMகள், டைமண்ட் கட் அலாய் வீல்கள் கொடுக்கப்படுள்ளது . பின்புறம் LED டெயில் லேம்ப்கள் லைட் ஸ்ட்ரிப் மூலம் பொறுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு இறுதியில் கியா நிறுவனம் காம்பெக்ட் SUV காரை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.யு.வி.யின் ப்ரோடோடைப் மாடல் சோதனை செய்யப்படும் விடியோவை ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது . புதிய SUV காரில் UVO கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது .