மெக்சிகோவில் மாயமான தங்கள் குடும்பத்தினரை தேடி அகதிகள் அதிகமானோர் சியாபாஸ், ஹிடால்கோ ஆகிய நகரங்களில் ஊர்வலமாக சென்றிருக்கிறார்கள்.
மெக்சிகோ நகரை நோக்கி ஏராளமான அகதிகள் மாயமான தங்கள் குடும்பத்தினரின் புகைப்படங்கள் மற்றும் பேனர்களை வைத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றிருக்கிறார்கள். இதில் அனிதா ஜெலயா என்ற பெண் அமெரிக்க நாட்டிற்குச் சென்ற சமயத்தில் காணாமல் போன தன் மகனை கண்டுபிடிக்க எந்த சிரமத்தை வேண்டுமானாலும் சந்திப்பேன் என்று கூறியிருக்கிறார்.
மெக்சிகோவில் பொருளாதார சீர்கேடு இருப்பதால் ஒவ்வொரு வருடமும் அங்கிருந்து அமெரிக்க நாட்டிற்கு தப்புவதற்கு முயன்று ஆயிரக்கணக்கான அகதிகள் காணாமல் போகிறார்கள். இது தொடர்பில் அதிகாரிகள் தகுந்த விசாரணை மேற்கொள்வது இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.