மருத்துவமனையில் நுழைந்து இளைஞரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய வழக்கில் இரண்டு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளார்கள்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியார் நகரைச் சேர்ந்தவர் முகிலன். இவரின் நண்பர் ராஜேஷ். இவர்கள் இருவருக்கும் டிஎம்சி காலனி பகுதியில் வசித்து வரும் சுரேஷ், கவாப், லோகேஷ் மற்றும் சக்தி உள்ளிட்டோருக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் முகிலன் கத்தி குத்துப்பட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் தையல் போட்டுக் கொண்டிருந்த பொழுது சுரேஷ், கவாப், லோகேஷ், சக்தி உள்ளிட்ட 4 பேரும் முகிலனை கத்தியால் குத்தி விட்டு தப்பித்து சென்றுவிட்டனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ஏற்கனவே ஏற்பட்ட தகராறில் காயமடைந்து சுரேஷ் திருப்பத்தூர் மருத்துவமனையிலும் கவாப் வாணியம்பாடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் போலீசார் இருவரையும் கைது செய்தார்கள். மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.