வாலிபரை சாதி பெயர் சொல்லி திட்டிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மனபாளையம் பகுதியில் கலைவாணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த அர்ஜுனன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை 1 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். இந்நிலையில் கலைவாணன் அந்த நிலத்தில் இருக்கும் முட்புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சுப்பிரமணி, முத்துக்கண்ணு, கண்ணன் ஆகிய 3 பேர் இந்த நிலம் கூட்டு பட்டாவில் இருப்பதாக கூறி கலைவாணனின் ஜாதி பெயர் சொல்லி திட்டியுள்ளனர். இதுகுறித்து கலைவாணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.