Categories
பல்சுவை

பாம் தயாரிப்பதற்கு பதிலாக கேக் தயாரித்த ஓசாமா பின்லேடன்…. இதுவரை நீங்கள் தெரிந்து கொள்ளாத சில சுவாரஸ்யமான தகவல்கள்…. வாங்க பார்க்கலாம்…!!

இதுவரை நாம் தெரிந்து கொள்ளாத சில சுவாரஸ்யமான 6 தகவல்கள் பற்றி இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த intelligence agency ஒரு முறை ஒசாமா பின்லேடனின் அல்கொய்தா டெரரிஸ்ட் வெப்சைட்டை ஹேக் செய்தது. இந்த வெப்சைட்டில் ஒசாமா பின்லேடன் பாம் தயாரிப்பதற்கான பார்முலாவை வெளியிட்டிருந்தார். இதன் காரணமாக பிரிட்டன் intelligence agency அல்கொய்தா டெரரிஸ்ட் வெப்சைட் ஹேக் செய்தது. அதன் பின் பாம் தயாரிப்பதற்கான பார்முலாவை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக கேக் செய்வதற்கான பார்முலாவை வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் வெப்சைட்டில் இருந்த பார்முலாவை பயன்படுத்தி தீவிரவாதிகள் பாம் தயாரித்துள்ளனர். ஆனால் பாதி தயாரான பிறகு தான் அவர்களுக்கு பாம்‌ இல்லை கேக் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஜேம்ஸ் ஹாரிசன் என்பவர் 22 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். எப்படி என்று தானே யோசிக்கிறீர்கள்? அதாவது ஜேம்ஸ் ஹாரிசனின் ரத்த வகை உலகிலேயே மிகவும் அரிதானதாகும். இவருடைய ரத்தத்தை பயன்படுத்தி உடல் நலம் சரியில்லாத குழந்தைகளின் வியாதியை குணப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாகவே ஜேம்ஸ் ஹாரிசன் கடந்த 50 வருடங்களாக 1,000 தடவைக்கு மேல் ரத்த தானம் செய்துள்ளார்.

பைசா கோபுரம் சரிவாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்த கோபுரம் சரியாக 4 டிகிரி சரிந்திருக்கிறது. இதன் காரணமாகவே பைசா கோபுரம் உலக அளவில் பிரபலமானது. இதேப் போன்று இந்தியாவில் ஒரு கோவிலும் சரிந்திருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் அதுதான் உண்மை. வாரணாசியில் ரத்னேஷ்வர்‌ கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 19-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இந்த கோவில் 9 டிகிரி அளவுக்கு சரிந்திருக்கிறது.

பொதுவாக நாம் குடிக்கும் தண்ணீர் பாட்டிலில் 3 கோடுகள் இருக்கும். இந்தக் கோடுகள் எதற்காக இருக்கிறது தெரியுமா? அதாவது தண்ணீர் பாட்டில்கள் மிகவும் லேசான பிளாஸ்டிக்கால் செய்யப்படுகிறது. இதன் காரணமாகத்தான் பாட்டிலில் 3 கோடுகள் இருக்கிறது. ஒருவேளை இந்தக் கோடுகள் இல்லாவிட்டால் நாம் தண்ணீர் பாட்டிலை கைகளால் சாதாரணமாக பிடித்தாலே அது எளிதில் சேதம் ஆகிவிடும்.

ராஜஸ்தானைச் சேர்ந்த சோபியா கான் என்ற பெண் கடந்த 2020 டிசம்பர் 16-ஆம் தேதி டெல்லியில் இருந்து ஓட ஆரம்பித்துள்ளார். இவர் டெல்லியில் இருந்து மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற இடங்களுக்கு தொடர்ந்து ஓடியுள்ளார். அதன் பிறகு கொல்கத்தாவில் இருந்து மீண்டும் டெல்லிக்கு ஓடியுள்ளார். இவர் மொத்தம் 110 நாட்கள் ஓடியுள்ளார். இதன் மொத்த தூரம் 6,002 கிலோமீட்டர் ஆகும். இவர் மிகவும் குறைவான நேரத்தில் 6,002 கிலோ மீட்டரை கடந்த காரணத்திற்காக உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

நம் அனைவருக்கும் முதல் உலகப் போரைப் பற்றி தெரிந்திருக்கும். இந்த உலகப் போரின் போது வீரர்கள் மட்டும்தான் போராடினார்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் வீரர்களுடன் சேர்ந்து நாய்களும் போராடியுள்ளது. இந்த நாய்கள் மெர்சி டாக்ஸ் என அழைக்கப்பட்டது. இந்த நாய்கள் போரில் என்ன செய்தது என்று தானே யோசிக்கிறீர்கள்? அதாவது போரில் காயமடைந்த வீரர்களுக்கு மெர்சி டாக்ஸ் முதலுதவி பெட்டிகளைக் கொண்டு கொடுத்துள்ளது. இதன் காரணமாக காயமடைந்த வீரர்கள் உடனடியாக முதலுதவி செய்து தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ள முடிந்தது.

Categories

Tech |