Categories
ஈரோடு திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்கப்படும் பயணிகள் ரயில்”… பொதுமக்கள் ஹேப்பியோ ஹேப்பி… எங்கு தெரியுமா…!!!!

ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோட்டுக்கு இரண்டு வருடங்களுக்கு பிறகு ரயில் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக சென்ற இரண்டு வருடங்களாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடு வரை செல்லும் ரயில்கள் இயக்கபடாமல் இருந்த நிலையில் இயக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து தென்னக ரயில்வே ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடு வரை செல்லும் பயணிகளுக்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை இன்று முதல் முன்பதிவு இல்லாமல் இயக்கப்படுவதாக அறிவித்திருந்தது.

இதன்படி இன்று பிற்பகல் 3.10 மணியளவில் ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டு திருப்பத்தூர், காக்கங்கரை, குன்னத்தூர், சாமல்பட்டி, தாசம்பட்டி, தொட்டம்பட்டி, மொரப்பூர், தொங்கனூர், புத்திரெட்டிபட்டி, பொம்மிடி, லோகூர், டேனிஷ்பேட்டை, தின்னப்பட்டி, கருப்பூர், சேலம், வீரபாண்டி ரோடு, மகுடஞ்சாவடி, மாவெள்ளிபாளையம், சங்கரிதுர்க், ஆனங்கூர், காவிரி ஆகிய இருபத்தி ஒரு ரயில் நிலையங்களில் நின்று இரவு 7.45 மணியளவில் ஈரோடு ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

இந்த ரயில் நாளை மீண்டும் 6:25 அளவில் ஈரோட்டில் இருந்து புறப்பட்டு மதியம் 12.10 மணியளவில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்தடையும். இரண்டு வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோட்டுக்கு ரயில்கள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |