உலக அரங்கில் முதன்மை நிறுவனமாக திகழும் ஆப்பிள் புதியதாக HidrateSpark PRO STEEL ஸ்மார்ட் வாட்டர் பாட்டிலை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. அதில் பல்வேறு ஸ்மார்ட் அம்சங்கள் நிறைந்துள்ளன. அதன்படி விலை உயர்ந்த ஸ்மார்ட் தண்ணீர் பாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பாட்டிலின் பெயர் ஹைட்ரேட்ஸ் பார்க் புரோ ஸ்டீல். இது துருப்பிடிக்காது. இதில் பானங்களை 24 மணி நேரம் வரை குளிர்ச்சியாகவோ அல்லது சூடாகவோ வைத்திருக்கும் திறன் உள்ளது. ப்ளூடூத் மூலமாக ஹைட்ரேட் ஸ்பார்க் ஆப்சன் உடன் தங்கள் ஸ்மார்ட் பாட்டில்களை இணைப்பது மட்டுமே பயனர்களின் வேலையாகும்.
அதன் பிறகு உங்கள் உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை அந்த செயலி கணித்து விடும். இந்த பாட்டில் அடியில் கொடுக்கப்பட்டிருக்கும் எல்இடி ஸ்மார்ட் சென்சார் விளக்குகள் பாட்டிலை ஒளிமயமாக காட்டும். ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் பாட்டில் பயனர்கள் தண்ணீர் குடிப்பதை நினைவூட்டுகின்றது. மேலும் அவர்களின் தண்ணீர் உட்கொள்ளலை கண்காணிக்கிறது. ஆப்பிள் தயாரிப்புகளில் இவன் செயலியை பயன் அதிகம் பயன்படுத்த முடியும். ஆப்பிள் பயனர்களின் தனிப்பட்ட உடல்நிலை தகவல்கள் கண்காணிப்பையும் தினசரி தண்ணீர் குடிக்கும் இலக்கை சரி செய்வதற்கும் இந்த ஸ்மார்ட் பாட்டில் உதவுகிறது.
இதன் ஒவ்வொரு செயல்பாடுகளையும் Apple health செயலி கண்காணிக்கிறது. அதுமட்டுமல்லாமல் இதில் எக்கச்சக்கமான அம்சங்களும் நிறைந்து உள்ளது. இதற்கு 100 நாள் உத்தரவாதத்தையும் நிறுவனம் வழங்குகின்றது. ஸ்மார்ட் வாட்டர் பாட்டில்கள் நான்கு வெவ்வேறு வகையில் கிடைக்கின்றன.அதில் Hidrate Spark 3 ஸ்மார்ட் வாட்டர் பாட்டில் இந்திய மதிப்பில் சுமார் ரூ.4,600 ஆகவும், HidrateSpark PRO ஸ்மார்ட் வாட்டர் பாட்டில் இந்திய மதிப்பில் சுமார் ரூ.4,600 ஆகவும், போனஸ் ஸ்ட்ரா மூடியுடன் வரும் HidrateSpark1 இந்திய மதிப்பில் சுமார் ரூ.5,400 ஆகவும், HidrateSpark PRO STEEL ஸ்மார்ட் வாட்டர் பாட்டில் இந்திய மதிப்பில் சுமார் ரூ.6,125 ஆகவும் சந்தையில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.