ஒரு நாணயத்தை தண்ணீரில் போட்டால் மூழ்கிவிடுகிறது. ஆனால் ஒரு பிரம்மாண்டமான கப்பல் எப்படி தண்ணீரில் மிதக்கிறது என்று உங்கள் அனைவருக்கும் கேள்வி எழலாம். மீனவர்கள் பயன்படுத்தக்கூடிய படகு மரம் போன்ற மிதக்கும் பொருள்களால் செய்யப்பட்டாலும் மிகப் பெரிய கப்பல் இரும்பு போன்ற உலோகத்தால் செய்யப்படுகின்றன. கப்பல் தண்ணீரில் இருக்கும்போது அதன் உடற்பகுதி ஓரளவு தண்ணீரில் அமிழ்ந்து இருப்பதை பார்க்க முடியும். கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும். அதனால் கப்பலின் குறிப்பிட்ட அளவு அடிப்பகுதி கடலில் இருக்கும். தண்ணீரில் இயற்கையாகவே உள்ள அழுத்தம் கப்பலின் உடற்பகுதி மீது செலுத்தப்படுகிறது. அதேசமயம் கப்பலின் எடையும் தண்ணீரை அழுத்துகிறது. இந்த இரண்டு அழுத்தங்களும் ஒன்றுசேர்ந்து சமநிலையை ஏற்படுத்தும் வகையில் கப்பல்கள் வடிவமைக்கப்படுகின்றன. அதனால் கப்பல் மிதக்கின்றது. அன்றைய காலத்தில் எல்லாம் பெரும்பாலான கப்பல்கள் கடலில் மூழ்கிவிடும். அதனை அடிக்கடி நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இப்போது அதுபோன்ற சம்பவங்கள் எதுவும் அதிக அளவு நடைபெறுவதில்லை. அதற்கு காரணம் முன்பெல்லாம் கப்பல் ஓரிடத்தில் இருந்து கிளம்பினால் அது சென்றடையும் தூரம்வரை எதுவும் தெரியாது. எங்கு புயல் உருவாகும்,காற்று எவ்வளவு வேகத்தில் வீசும் என்பது பற்றிய கணிப்பு எதுவும் இருக்காது. அதனால் பெரும்பாலான கப்பல்கள் நீரில் மூழ்கிவிடும். தற்போது satellite உதவியால் எங்கு புயல் வரும், எவ்வளவு வேகத்தில் வரும் என்பதை எளிதாக பார்க்க முடியும். அதனால் அந்த புயல் வரும் பக்கம் கப்பலை எடுத்துச் செல்ல மாட்டார்கள். அதனைப்போலவே கப்பலில் ஏற்றப்படும் சரக்குகளை மிகவும் கவனமாக ஏற்றுவார்கள். அதற்கென தனி கணக்கு இருக்கும். கப்பல் எவ்வளவு எடையைத் தாங்கும் என்பதைப் பொறுத்து சரக்குகள் ஏற்றப்படும். அதனைப்போலவே கேப்டனும் செயல்படுவதால் பெரும்பாலான விபத்துக்கள் தற்போது நடைபெறுவதில்லை.
Categories