Categories
பல்சுவை

“Post-mortem எப்படி செய்கிறார்கள் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா”….? முழு விவரம் இதோ….!!!!

இறந்த மனிதர்களின் உடல்களை வெட்டி ஆய்வு செய்வதற்குப் பெயர்தான் உடற்கூறு ஆய்வு. முதலில் உடற்கூறு ஆய்வு செய்ய ஆரம்பிக்கும்போது என்னென்ன முறைகளை கையாளுவார்கள் என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். ஒருவர் இறந்து விட்ட பிறகு அவர்களின் உடலை உடற்கூறு ஆய்வு செய்வதற்கு முன்பு உடல் முழுவதையும் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். பின்னர் கைவிரல் ரேகை எடுப்பார்கள். இந்த கைவிரல் ரேகையை எடுக்க முடியவில்லை என்றால் அவர் கைகளில் உள்ள மேல் தோலை எடுத்துவிட்டு பின்னர் ரேகைகளை பதிவு செய்வார்களாம்.

அதன் பிறகு உடல் முழுவதையும் எக்ஸ்ரே எடுத்து உடலில் ஏதாவது புல்லட், கத்திக்குத்து, காயம் உள்ளதா? என்பதை ஆராய்ச்சி செய்வார்கள். அதன் பிறகு உடலை ஒய் வடிவில் வெட்டி அதனுள் உள்ள ஆர்கான் அனைத்தையும் எடுத்து தனித்தனியாக சோதனை செய்வார்களாம் . ஏன் இதனை சோதனை செய்கிறார்கள் என்றால் அப்போதுதான் எந்த ஒரு காரணத்தினால் சம்பந்தப்பட்டவர் இறந்தார் என்பது தெளிவாகத் தெரியவரும் என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள். ஒரு வேளை தேவைப்பட்டால் மூளையையும் வெளியில் எடுத்து அதனையும் ஆய்வு செய்வார்களாம். அதன்பிறகு எல்லா ஆர்கனையும் உள்ளே வைத்து தையல் போட்டு பின்னர் சம்பந்தப்பட்ட நபர்களிடம் கொடுத்துவிடுவார்கள். இதுதான் போஸ்ட்மார்ட்டம் செய்யும் முறை என்று தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |