கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பிளஸ்டூ மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து அந்த கடையை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மூடி சீல் வைத்துள்ளனர்.
கேரள மாநிலம், கசரக்கோடு மாவட்டத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவி தேவானந்தா. இவர் கரிவெள்ளூர் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பயின்று வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது பள்ளி நண்பர்கள் சக மாணவிகளுடன் பள்ளிக்கூடம் அருகே அமைந்துள்ள ஐடியல் என்ற குளிர்பான கடையில் சவர்மா சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே தேவானந்தாவுக்கு வாந்தி, மயக்கம், உடல் நலப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அவருக்கு மட்டுமல்லாமல் அந்த கடையில் சாப்பிட்ட 30க்கும் மேற்பட்டோர் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் கசரக்கோடு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மாணவி தேவானந்தா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கெட்டுப்போன சர்மாவை வாடிக்கையாளர்களுக்கு அந்த கடை வழங்கியுள்ளது. அதை சாப்பிட்ட பலருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மாணவி தேவானந்தா உயிரிழந்தார் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து கடை ஊழியர்கள் கைது செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும் இந்த கடையின் உரிமையாளர் மத்தியகிழக்கு நாட்டில் உள்ளார். இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடையில் சர்மாவை செய்த நேபாளத்தை சேர்ந்த நந்தீஸ் ராய் மற்றும் கடையை நிர்வாகித்து வந்த அனாஸ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிளஸ் டூ மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து காசர்கோடு மாவட்டம் முழுவதிலும் உள்ள ஷவர்மா கடைகளை உடனடியாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.