எலான் மஸ்க் பற்றி உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரிந்திருக்கும். இவர்தான் டெஸ்லா கம்பெனியின் ஓனர். அதுமட்டுமல்லாமல் உலகின் நம்பர் ஒன் பணக்காரர். இப்படிபட்ட இவர் அவருடைய பாதுகாப்பிற்காக 50 ஆயிரம் டாலர் கொடுக்க யோசிக்கிறார். எலான் மஸ்க் குறித்த அனைத்து தகவல்களையும் 19 வயது சிறுவன் ஒருவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த சிறுவனின் பெயர் ஜாக் ஸ்வீனி. எலான் மஸ்க்கின் பிரைவேட் ஜெட் கல்ப் ஸ்ட்ரீம் ஜெட் விமானம் எங்குச் செல்கிறது? இப்போது எங்கு இருக்கிறது? என்பது குறித்து ரியல் டைம் டேட்டாவை ஜாக் ஸ்வீனி டிவிட்டரில் பதிவு செய்து வருவது தனது பாதுகாப்பிற்கு ஆபத்து என்று கருதினார். இதனால், ஜாக் ஸ்வீனியிடம் தனது விமானத்தின் இருப்பிடத்தைப் பதிவிடும் டிவிட்டர் கணக்கை டெலிட் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதற்கு 5000 டாலர் பணம் தருவதாகவும் எலான் மஸ்க் கூறியுள்ளார்.
ஆனால் அந்த சிறுவன் எனக்கு 5 ஆயிரம் டாலர்போதாது 50,000 டாலர் வேண்டும் என்றும் கூறியுள்ளார். அந்தப் பணம் சிறுவனின் கல்லூரி படிப்பிற்கும், அவருடைய கனவு காரான டெஸ்லா கார் வாங்குவதற்கும், அந்த டெஸ்லா கம்பெனியின் ஓனரிடமே காசை வாங்க முயற்சித்துள்ளார். ஆனால் 50000 டாலர் கொடுப்பதற்கு எலான் மஸ்க் மறுத்துவிட்டார். பல கட்ட விவாதத்திற்குப் பின்பு கடைசியாக எலான் மஸ்க் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் கேட்டார் ஜாக் ஸ்வீனி. அதற்கு எலான் மஸ்க் எந்த பதிலும் தெரிவிக்க வில்லை. மாறாக ஜாக் ஸ்வீனியின் டிவிட்டர் கணக்கை பிளாக் செய்துள்ளார் எலான் மஸ்க்.