Categories
விளையாட்டு

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான…. இந்திய அணி அறிவிப்பு….!!!!

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி  ஜூலை மாதம் 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியை நடத்தும் இந்தியா முதன்முறையாக ஓபன் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் தலா 2 அணிகளை களமிறக்குகிறது. 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், 20 பேர் கொண்ட இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிராண்ட் மாஸ்டர் பிரவின் திப்சே அணியை வழிநடத்துவார். ஓபன் பிரிவு முதல் அணிக்கு கிராண்ட் மாஸ்டர் ஸ்ரீநாத், 2-வது அணிக்கு கிராண்ட் மாஸ்டர் ஆர்.பி.ரமேஷ் ஆகியோர் பயிற்சியாளராக இருப்பார்கள். பெண்கள் முதல் அணிக்கு கிராண்ட் மாஸ்டர் அபிஜித் குண்டேவும், 2-வது அணிக்கு கிராண்ட் மாஸ்டர் ஸ்வப்னில் தோபடேவும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |