தமிழகத்தில் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்ததை அடுத்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி மாணவர்களுக்கு மே மாதம் பொதுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வித புகாரும் இடம் தராமல் பொதுத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் ஏதேனும் தவறு ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் அனைவரும் அனைத்து பாடங்களையும் படித்து பொதுத் தேர்வுக்கு தயாராக வேண் டும் என தேர்வுத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதற்கான பாடத்திட்ட விவரங்கள் அனைத்தும் தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே குறைக்கப்பட்ட பாடத் திட்டங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் மே 5-ஆம் தேதி முதல் பொது தேர்வு தொடங்க உள்ள நிலையில், 3,119 மையங்களில் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 26.76 லட்சம் மாணவ-மாணவிகள் பொதுத் தேர்வு எழுதுகின்றனர். கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு பொதுத் தேர்வு முழுமையாக நடைபெறுகின்றது.