Categories
உலக செய்திகள்

எமனையே ஏமாற்றிய நாய்…. 21 வருடங்கள் வாழ்ந்து…. கின்னஸ் புத்தகத்தில் இடம்….!!!!

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் க்ரீனாக்ரேஸின் கிசெலா ஷோர் என்ற நபர் வசித்து வருகிறார். அவருக்கு செல்லப்பிராணி நாய் ஒன்று உள்ளது. அந்த நாய் சிஹுவாஹுவா என்ற வகையை சேர்ந்தது. அதன் பெயர் டோபிகீத். இந்த நிலையில் அந்த நாய் 21 வருடங்கள் 66 நாட்களை கடந்து வாழ்ந்து வருகின்றது. அதில் என்ன சிறப்பு என்றால் அந்த வகை நாய்கள் அதிகபட்சமாக 12 முதல் 18 வருடங்கள் மட்டுமே உயிர் வாழும். ஆனால் இந்த நாய் அதையும் தாண்டி ஆரோக்கியமாக இருபத்தி ஒரு வருடங்கள் வாழ்ந்து உள்ளது.

அதன் மூலமாக இந்த நாயை அதிக நாட்கள் உயிர் வாழ்ந்த நாயாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நாயை உலகின் மிகப் பழமையான நாய் என்றும் அழைக்கப்படுகின்றது. இது குறித்து பேசிய நாயின் உரிமையாளர், இனிமையான, மென்மையான மற்றும் அன்பான செல்லப்பிராணி இது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |