துப்பாக்கியால் விண்ணை நோக்கி சுடும்போது மேலே செல்லும் குண்டுகள் என்னவாகும். அது திரும்பவும் பூமியை நோக்கி வரும் போது நமக்கு ஆபத்தை ஏற்படுத்துமா? இதைப்பற்றி நாம் இந்த தொகுப்பில் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுடப்படும் புல்லட் 3 கிலோமீட்டர் வரைக்கும் நேராக விண்ணை நோக்கி செல்லும். அதன்பிறகு புவியீர்ப்பு விசையின் காரணமாக அது மீண்டும் பூமியை நோக்கி திரும்பும்போது, வேகம் சற்று குறைவாக இருக்கும். அதாவது ஒரு மணி நேரத்திற்கு 400 கி.மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கித் திரும்பும். அது யார் மீதாவது பட்டால் கட்டாயம் காயத்தை ஏற்படுத்தும். ஏன் உயிரே போவதற்குக் கூட வாய்ப்புள்ளது. இதுபோல் வானத்தை நோக்கி சுடப்பட்ட புல்லட்டுகளால் இதுவரை பல மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாகவே பல நாடுகளில் பண்டிகைகளின் பொழுது வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டைப் பொருத்தவரை பெரும் தலைவர்கள் யாராவது இறந்துவிட்டால் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கிகளை சுடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த துப்பாக்கிகளில் இருந்து வெளியாகும் குண்டுகள் போலியானவை என்றும், அவை வெடி சத்தத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது என்று கூறப்படுகின்றது. இருப்பினும் சில அதிபுத்திசாலி நபர்கள் கொண்டாட்டம் என்ற பெயரில் துப்பாக்கிகளை கொண்டு வானத்தை நோக்கி சுடுகின்றன. இதனால் பலருக்கும் உயிருக்கே ஆபத்து ஏற்படுகின்றது. ஆனால் இந்தியாவில் லைசென்ஸ் இல்லாமல் துப்பாக்கியை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி துப்பாக்கியை பயன்படுத்தினால் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் படுவார்கள்.