Categories
மாநில செய்திகள்

இனி இதையெல்லாம் தமிழ் (அ) ஆங்கிலம் மட்டுமே செய்யணும்….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரை மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சீருடை அணிந்து பின்னர் ஏற்றுக்கொள்ளும் வழக்கமான உறுதிமொழிக்கு பதிலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சமஸ்கிருத மகரிஷி சரக் சப்த் உறுதிமொழியை வாசிக்க இதர மாணவர்கள் தொடர்ந்து உறுதிமொழியை ஏற்றனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்பு பட்டியலில் மாற்றப்பட்டுள்ளார். மேலும் அந்த கல்லூரியின் துணை முதல்வர்தனலட்சுமிக்கு டீன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் கடந்த 11ஆம் தேதி ராமநாதபுரம் அரசு கல்லூரியிலும் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்டதால் சர்ச்சை வெடித்தது.

இதனை தொடர்ந்து தற்போது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்ததாவது “இந்திய ஒன்றியத்தில் முதல் முறையாக தமிழகத்தில் சித்த மருத்துவத்திற்கு என்று விரைவில் தனி பல்கலைக்கழகம் துவங்கி சித்த மருத்துவக்கல்லூரி நிறுவப்பட உள்ளது. 100 படுக்கைகளுடன் கூடிய சித்த மருத்துவமனை நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சித்த மருத்துவமனை, அடுத்த ஆண்டு சித்த மருத்துவக் கல்லூரியில் நிச்சயம் தொடங்கப்படும். சமஸ்கிருதம் படித்தவர்கள் மட்டுமே மருத்துவராக முடியும் என்று ஒரு காலகட்டத்தில் நிலைமை இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலைமை மாறிவிட்டது. மாணவர்களை சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்க செய்த கல்லூரி முதல்வர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் கல்லூரிகளில் உறுதிமொழியை ஆங்கிலத்திலோ அல்லது தமிழில் மொழி பெயர்ப்பு செய்துதான் மாணவர்கள் ஏற்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |