ஓடும் ரயிலில் ஓட்டுநர் தூங்கினால் என்ன ஆகும் என்பது குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
நம் நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் பொதுவாக ரயில் பயணிகளை அதிகளவில் விரும்புகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ரயில்களில் கட்டணம் குறைவாக இருப்பதுதான். இந்நிலையில் நாம் ரயிலில் செல்லும் போது ஓட்டுநர் திடீரென தூங்கி விட்டால் என்ன நடக்கும் என்பது குறித்தும் யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? பொதுவாக ரயில்களில் 2 ஓட்டுனர்கள் இருப்பார்கள். ஒரு ஓட்டுநர் தூங்கிவிட்டால் மற்றொருவர் ரயிலை இயக்குவார். ஒருவேளை 2 ஓட்டுநர்களும் தூங்கி விட்டால் என்ன ஆகும்.
அதாவது ரயிலை இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு ஒலிபெருக்கியை அடிக்காவிட்டாலும், ரயில் எஞ்சினின் வேகத்தை அதிகரிக்க மற்றும் குறைக்காமல் இருந்தால் ரயில் தானாக மெதுவாக சென்று நின்று விடும். இந்நிலையில் சில நேரங்களில் ரயில்கள் ஒரே வேகத்தில் அதிக தூரம் செல்ல வேண்டியிருக்கும். அந்த சமயத்தில் ஓட்டுநர் ரெட் மேன்ஸ் லிவர் என்ற பட்டனை அழுத்துவார்கள். இந்த பட்டன் ஓட்டுனர்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்பதை குறிக்கும் விதமாக அழுத்தப்படுகிறது. இந்த பட்டன் ஒருவேளை 3 நிமிடங்களுக்கு மேல் அழுத்தப்படாமல் இருந்தால் ரயில் தானாகவே வேகத்தை குறைத்து நின்றுவிடும்.