Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்த மருந்து..!!

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக்குவதற்கு எளிய வழி:

தேவையான பொருட்கள்:

பச்சை மஞ்சள்

இஞ்சி

துளசி இலை

பச்சை மஞ்சள்,  அதன் பாதியளவு இஞ்சி

இஞ்சி, அதன் பாதியளவு துளசி

பச்சை மஞ்சள்- 100 கிராம்
இஞ்சி                   – 50 கிராம்
துளசி                  – 25 கிராம்

மூன்றையும் ஒன்றாக அரைத்து பேஸ்ட் போல செய்து  வைக்கவும்.

தினமும் காலை வெறும் வயிற்றில்,1 டம்ளர் வெதுவெதுப்பான நீர், 2 ஸ்பூன் பேஸ்ட், 4 ஸ்பூன் தேன்
கலந்து அருந்தவும். மூன்று நாட்களுக்கு மட்டும். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், வயிற்றில் பூச்சிகள் அழியும்.

அடுத்த ஒரு வருடத்திற்கு குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் சளி இருமல் காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் இருக்காது.
இந்த பேஸ்ட் அரை ஸ்பூன் எடுத்து தேன் எலுமிச்சை சாறு கலந்து தினமும் அருந்த தொப்பை உடல் எடை குறையும.

இந்த பேஸ்ட் உடன் வெள்ளை சர்க்கரை கலந்து முகத்தில் தேய்த்து உடனே கழுவி வர முகத்தில் தழும்புகள், மருக்கள் போகும் முகம் தெளிவாகும்.  மஞ்சள் கிழங்கின் இலையை காய வைத்து பொடி செய்து வைத்து கொள்ளுங்கள்.

இந்த பொடியை தேங்காய் எண்ணெய் கலந்து இரவு முகத்தில் தடவி காலை எழுந்தவுடன் கழுவி வர பெண்களின் முகத்தில் வளரும் மீசை தாடி போன்ற முடிகள் விழுந்துவிடும். மீண்டும் வளராமல் காக்கும். ஓரிரு வாரங்களில் நல்ல மாற்றம் தெரியும்.

Categories

Tech |