கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் ஓட்டுநர் பலியான நிலையில், 6 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அய்யனார்குளம்பட்டியில் வசிக்கும் 7 பேர் ஒரு சொகுசு காரில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு இரவு நேரத்தில் மீண்டும் காரில் ஊருக்கு புறப்பட்டனர். இந்நிலையில் மகாதானபுரம் ரவுண்டானா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்பு சுவர் மீது மோதி கவழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் ஓட்டுநரான வேல்முருகன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதனையடுத்து படுகாயம் அடைந்த 6 பேரை அருகில் உள்ளவர்கள் மட்டும் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேல்முருகனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.