பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பனவிளை கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமாரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகுமாரி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் வீட்டில் இருக்கும் ஒரு அறையில் விஜயகுமாரியின் மகள் படித்துக் கொண்டிருந்தார். மற்றொரு அறையில் திடீரென விஜயகுமாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து தனது தாய் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு விஜயகுமாரியின் மகள் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயகுமாரியின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.