Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

உச்சகட்ட கொடூரம்… “மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை கொண்டு வாங்க”… ஸ்ரெட்ச்சரில் கலெக்டர் அலுவலகம் வந்த நோயாளி…!!!!!

நோயாளியை  நேரில்  அழைத்து வந்து காப்பீட்டு அட்டை பெற்ற  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள கே.என். பேட்டை  பகுதியில் மாற்றுத்திறனாளியான பேபி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வீட்டில் தவறி விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த  பேபியை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு பேபியை பரிசோதித்த மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், அதற்காக  மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பெற்று வருமாறு  கூறியுள்ளார்.  இதனையடுத்து அவரது உறவினர்கள் பேபியை  ஆம்புலன்ஸில் ஏற்றி கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர்  ஸ்ரெட்ச்சரில்    பேபியை வைத்து காப்பீட்டு திட்ட அலுவலகத்திற்கு அழைத்து சென்று மருத்துவ காப்பீட்டு அட்டை வாங்கியுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்தபோது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு மருத்துவ காப்பீடு அட்டை தேவையில்லை. மேலும் ஆதரவு இல்லாத  நோயாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை தேவைப்பட்டால் மருத்துவர்கள் முறையாக தகவல் தெரிவித்தால் உடனடியாக மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான அட்டை வழங்கப்படும். ஆனால் பேபிக்கு மருத்துவ காப்பீடு அட்டை தேவை என முன்கூட்டியே யாரும் தெரிவிக்கவில்லை. அவர்கள் தகவல் தெரிவிக்காமலேயே ஆம்புலன்ஸில் பேபியை அழைத்து வந்துள்ளனர். இது பற்றி முன்கூட்டியே தெரிந்திருந்தால் நாங்களே நேரில் சென்று அவருக்கு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டை வழங்கி இருப்போம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |