மின் கம்பத்தின் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆலம்பட்டிபுதூர் பகுதியில் சுரேஷ் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மரிசிலம்பு சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் நிலைதடுமாறி சாலையின் அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியது. மேலும் மின்கம்பம் காரின் மீது விழுந்ததால் தீ பற்றி எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காருக்குள் இருந்த சுரேஷ்பாபுவை மீட்க முயன்றனர். ஆனால் மீட்க முடியாததால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அனைத்து உடல் கருகி இறந்த சுரேஷ்பாபுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.