மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாலிபர் ஒருவர் தனது தந்தையுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிக்குப்பம் பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று முருகேசன் தனது தந்தையுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இவர்களுக்கு சொந்தமான சொத்துக்களை சிலர் முறைகேடாக அவர்களது பெயரில் மாற்றியுள்ளனர். இதுகுறித்து முருகேசன் காவல்நிலையத்தில் பலமுறை அளித்துள்ளார் .
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த முருகேசன் தனது தந்தையுடன் சேர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஆட்சியரிடம் சென்று மனு அளிக்குமாறு கூறியுள்ளனர். அதன் பின்னர் முருகேசன் தனது தந்தையுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.