Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு இது கட்டாயம்…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் தற்போது 2 வருடத்திற்கு பின் கொரோனா தொற்று குறைந்து வந்த சூழ்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இந்த வருடம் கண்டிப்பான முறையில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என கூறப்பட்டிருந்தது. அதன்பின் பொதுத் தேர்வுகளுக்கான தேதிகளும் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்னும் ஒருசில நாட்களில் நடைப்பெற இருக்கிறது.

இதில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நாளை 6ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5-31 ஆம் தேதி வரையும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9ஆம் தேதி தொடங்குகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுத்தேர்வுகளில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்கு மாவட்ட வாரியாக முதன்மை கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மாணவர்கள் பொதுத் தேர்வில் கடைபிடிக்கவேண்டிய விதிகளும் வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது, பொதுத்தேர்வு எழுத போகும் மாணவ-மாணவிகள் காலணி மற்றும் பெல்ட் அணிந்து இருந்தால், அவற்றை தேர்வறைக்கு வெளியே கழற்றி வைத்து விட்டு செல்ல வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அதிரடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு தேர்வறையில் 20 மாணவர்கள் அமர்ந்து தேர்வெழுத இருப்பதாகவும், தேர்வுப்பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள்  அணிந்து கொள்வது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Categories

Tech |