அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி மே 8ஆம் தேதி அன்னையர் தினத்தன்று உக்ரைனில் இருந்து புலம்பெயர்ந்த தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை சந்திக்க உள்ளனர்.
அன்னையர் தினத்தன்று புலம்பெயர்ந்த உக்ரேனிய தாய்மார்களை சந்திக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், ருமேனியா மற்றும் ஸ்லோவாக்கியாவிற்கு மே மாதம் 5 முதல் 9ஆம் தேதி வரை சென்று சேவை உறுப்பினர்கள் மற்றும் தூதரக பணியாளர்களை சந்திக்க உள்ளார்.
இதனைத் தொடர்ந்து இடம்பெயர்ந்த உக்ரேனிய தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் போன்ற மனிதாபிமான உதவிப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களை ஜில் பைடன் சந்திக்க உள்ளார்.
மேலும் ஐ.நா. வெளியிட்ட தகவலின்படி ஏப்ரல் மாதம் 27-ம் தேதி உக்ரைன் நாட்டிலிருந்து அகதிகளாக கிட்டத்தட்ட 30 லட்சத்துக்கும் அதிகமான உக்ரேனியர்கள் போலந்துக்கும், ருமேனியாவுக்கு சுமார் 8,17,300 பேரும், ஸ்லோவாக்கியாவுக்கு 3,72,000 பேரும் வந்துள்ளனர் என்று ஐ.நா. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மே மாதம் 8ம் தேதி அன்று அமெரிக்க நாட்டில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த அன்னையார் தினத்தன்று உக்ரைனுக்கு எதிரான ரஷ்யா போரின் காரணமாக பலர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில் உக்ரேனிய தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் சந்திக்க உள்ளார்.
மேலும் அவரது வருகை உக்ரைனுக்கான ஆதரவைக் காட்டும் என்றும் உக்ரேனிய அகதிகளுக்கு அமெரிக்க உயர்மட்ட பிரதிநிதிகளால் உதவி செய்யும் என்றும் அண்டை நாடுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் நிகழ்ச்சியாக அமையும் என்றும் கருதப்படுகிறது. முன்னதாக, மார்ச் மாதத்தில் ஜில் பிடன் மற்றும் அவரது போலந்து இணை, அகடா கோர்ன்ஹவுசர்-டுடா ஆகிய இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளார்கள். ரஷியாவின் படையெடுப்பால் ஏற்பட்ட அகதிகள் நெருக்கடியில், முன்களத்தில் நின்று மருத்துவ சேவைகள் மற்றும் உதவிகளை விரைவுபடுத்த ஜில்பைடனும் அகடாவும் இணைந்து செயல்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.