Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“பண மோசடியில் ஈடுபட்ட கும்பல்”…. ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகையிட்ட பொதுமக்கள்…!!!!

பண மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று திருவாலங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட கூடல்வாடி, பெரிய மாஞ்சாங்குப்பம்,  சிறிய மாஞ்சாங்குப்பம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டு தங்களிடம் எங்கள் பகுதியைச் சேர்ந்த சிலர் இன்சூரன்ஸ் கம்பெனியில் ஒரு லட்சம் கட்டினால் 2 லட்சம் பணத்தை ஐந்து வருடங்களில் திரும்ப பெற்றுவிடலாம் என ஆசை வார்த்தைகளைக் கூறினார்கள்.

அதை நாங்கள் நம்பி அந்த இன்சூரன்ஸ் கம்பெனியில் மாதம் தோறும் பணம் செலுத்தி வந்த நிலையில் தற்போது 5 ஆண்டுகள் முடிவடைந்து அங்கு போய் பணம் கேட்ட பொழுது பணம் தர முடியாது என மிரட்டுகின்றார்கள். அதனால் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனுவை ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் கொடுத்தார்கள். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின்னர் அவர்கள் திரும்பிச் சென்றார்கள்.

Categories

Tech |