Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்”… அதிர்ச்சியடைந்த மக்கள்… ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகை…!!!!

வீரணம்பாளையம் பகுதியில் குடியிருப்பவர்களை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டாதால் அதிர்ச்சி அடைந்த மக்கள் கலெக்டரிடம் பட்டா வழங்குமாறு முறையிட்டு இருக்கின்றார்கள். 

திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் வினீத் தலைமையில் நடந்தது. அதில் தாராபுரம் கருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர்கள் மனு ஒன்றை அளித்தார்கள். அதில் அவர் கூறியுள்ளதாவது, கவுண்டச்சி புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட தச்சம்மன் புது ஊரில் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு சென்ற 2004ஆம் வருடம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய நிலையில் இதுவரை பயனாளிகள் யாரும் அங்கு குடி வரவில்லை.

கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெஸ்ட் நகர், பாலசுப்பிரமணி நகர், கவுண்டச்சி புதூர் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வாடகை வீட்டில் குடிசையிலும் வாழ்ந்து வருகின்றார்கள். ஆகையால் அவர்களுக்கு சம்பந்தப்பட்ட நத்தம் புறம்போக்கு நிலத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கினால் பயன்பெறுவார்கள் என கூறி இருக்கின்றார்கள்.

காங்கயம் தாலுகா உட்பட்ட வீரணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, எங்கள் பகுதியில் 42 குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். கூலி வேலை செய்யும் நாங்கள் வீடு கட்டுவதற்கு இடவசதி இல்லாமல் இருந்த நிலையில் 23 வருடங்களுக்கு முன்பாக ஊராட்சி தலைவர் மூலம் நிலம் தேர்வு செய்யப்பட்டு அங்கு வீடு கட்டி வசித்து வருகின்றோம்.

வீட்டுக்கு வீட்டு வரி ரசீது பெற்று, மின் இணைப்புகள் பெற்று, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, சாலை வசதி உள்ளிட்டவை பெறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கிராம நிர்வாக அதிகாரி சம்பந்தப்பட்ட இடம் குட்டை என்ற பெயரில் இருப்பதால் எங்களை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் கொடுத்துள்ளார். இதனால் எங்கள் நிலத்தை ஆய்வு செய்து வகை மாற்றம் செய்து நாங்கள் அங்கேயே கூடியிருக்க வீட்டுமனை பட்டா வழங்கி உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.

Categories

Tech |