Categories
பல்சுவை

சைக்கிளில் காற்றடிக்கும் பம்ப் எவ்வாறு செயல்படுகிறது தெரியுமா?…. வாங்க பார்க்கலாம்….!!

மிதிவண்டியில் காற்றடிக்கும் பம்ப் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.

மிதிவண்டியில் பம்பை வைத்து நாம் காற்றடிக்கும் போது அதில் எவ்வாறு காற்று வருகிறது தெரியுமா? மிதிவண்டியில் காற்றடிக்கும் பம்ப் என்பது ஒருவகை நேர்மறை மற்றும் இடப்பெயர்ச்சி காற்று பாம்ப் ஆகும். மிதிவண்டி பம்ப் கையால் இயக்கப்படும் பிஸ்டன் வழியாக செயல்படுகிறது. இந்தப் பிஸ்டன் ஒருவழி வால்வு மூலம் காற்றை வெளியில் இருந்து பம்ப்பிற்குள் இழுக்கிறது. அதன்பின் பிஸ்டன் காற்றை பம்பின் மூலமாக சைக்கிள் டயருக்குள் செலுத்துகிறது.

அதாவது மிதிவண்டி பம்பின் மேற்புறத்தில் அதாவது கைப்பிடியின் அருகில் 2 ஓட்டைகளும், டியூப் இருக்கும் இடத்தில் ஒரு ஓட்டையும் இருக்கிறது. நாம் பம்பை அழுத்தும் போது மேல்புற ஓட்டைகள் வழியாக வெளியில் இருந்து காற்றை உள் வாங்குகிறது. அதன் பின் மீண்டும் பம்பை அழுத்தும் போது அதில் இருக்கும் காற்று சைக்கிள் டயருக்கு செல்கிறது. இப்படிதான் மிதிவண்டியின் டயர்களில் பம்ப் மூலமாக காற்று நிரப்பப்படுகிறது.

Categories

Tech |