இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக பொது மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் வங்கிகளை விட அதிகம் லாபம் தரும் வட்டியும் வழங்கப்படுகிறது. அதனால் மக்கள் அஞ்சலக திட்டங்களில் சேமிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலுள்ள ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்கள் கால அளவும் இருக்கின்றது. அதன் மூலமாக சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் வட்டி தொகை முதிர்வு காலத்தில் கிடைக்கின்றது.
அவ்வகையில் செல்வமகள் சேமிப்பு திட்டம், கிராம சுரக்ஷா யோஜனா, தொடர் வைப்பு நிதி, காப்பீடு திட்டங்கள் போன்ற சேமிப்பு திட்டங்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மற்ற திட்டங்கள் வருங்கால வைப்பு நிதி மற்றும் சந்தை அபாயம் இல்லாத நம்பிக்கையான திட்டமாக உள்ளது. அதில் ஒரு சில முக்கிய அம்சங்கள் தற்போது இடம்பெற்றுள்ளது. அதன்படி அவசர கால கட்டங்களில் குறைந்த வட்டியில் இந்த திட்டத்திற்கு எதிராக கடன் பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது.
பி பி எஃப் கணக்கு தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து ஏழாவது நிதியாண்டில் உங்களது பிஎஃப் கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகையை நீங்கள் பெற முடியும். ஆனால் ஒரு நிதி ஆண்டில் ஒருமுறை மட்டுமே பணத்தை எடுக்க முடியும். பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் வருமானவரி பிரிவு 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரையில் வரிவிலக்கு உள்ளது. தற்போதுள்ள நிலவரத்தின்படி வட்டி விகிதம் 7.1 சதவீதமாகும். அதுமட்டுமல்லாமல் திட்டத்தின் மூலமாக கிடைக்கும் முதிர்வுத் தொகை 100% வரி விலக்கு உள்ளது. முதிர்வு காலம் 15 வருடங்கள். முன்கூட்டியே முடிவு செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகின்றது.