இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “தற்போது பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் இலங்கை மக்களுக்கு தமிழகத்திலிருந்து உயிர் காக்கும் மருந்துகள், அத்தியாவசிய பொருள்கள் மற்றும் உணவு உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்திருந்தேன்.
அதன்படி தற்போது ஒன்றிய அரசும் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது. எனவே முதற்கட்டமாக தமிழகத்திலிருந்து உயிர் காக்கும் மருந்துகள், 500 டன் பால் பவுடர், 40 ஆயிரம் டன் அரிசி உள்ளிட்டவை இலங்கைக்கு விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த நிலையில் இலங்கையில் வாழும் மக்களுக்கு உதவிட தமிழக மக்களும் நிதியுதவி வழங்க வேண்டும். அனைவரும் நம்மால் இயன்ற உதவியை செய்ய வேண்டிய தருணம் இது.
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். எனவே https://ereceipt.tn.gov.in.cmprf/cmprf.html-ல் மின்னணு பரிவர்த்தனை மூலமும், சேமிப்பு வங்கி கணக்கு எண் 117201000000070, IFSC குறியீடு IOBA0001172, PAN: AAAGC0038F A/C மூலமும் நிதி உதவி வழங்கலாம். முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குவோர் 80-Gஇன் கீழ் வருமான வரி விலக்கு பெறலாம்.