மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள கருத்தப்பிள்ளையூர் காமராஜர் தெருவில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜானகி என்ற மனைவி இருந்துள்ளார். தேசிய உதவி தொழிலாளியான ஜானகி வேலைக்கு செல்வதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது அவினாஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் ஜானகியின் சேலை காற்றில் பறந்து சிக்கியது. இதனால் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்ததோடு, ஜானகியும் தூக்கி வீசப்பட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக ஜானகியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜானகி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் காயமடைந்த அவினாசுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.