விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இளையநயினார்குளம் கிராமத்தில் விவசாயியான செல்லத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அழகம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அழகம்மாள் இறந்துவிட்டார். இந்நிலையில் மனைவியை இழந்த துக்கத்தில் இருந்த செல்லதுரை வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
இதனையடுத்து தனது மனைவியின் சமாதிக்கு சென்று செல்லதுரை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.