அமலாபால் நடித்த அதோ அந்த பறவை போல் திரைப்படம் நீண்டகாலமாக கிடப்பில் இருந்த நிலையில் தற்போது ரிலீஸாக உள்ளதாக தகவல் வந்துள்ளது.
மலையாள திரையுலகம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகி தமிழில் விக்ரம், விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையானார். அதன்பின் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணமான சிறிது காலத்திலேயே இருவருக்குள்ளும் கருத்து வேறு ஏற்பட்டதால் விவாகரத்து செய்தார். திருமணத்திற்குப் பின் நடிக்காமல் இருந்த அமலாபால் விவாகரத்துக்குப் பின் மீண்டும் படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
ஆனால் அவர் ஆடை திரைப்படத்தில் நிர்வாண கோலத்தில் நடித்ததால் அவரின் மார்க்கெட் மொத்தமாக போனது. இதனால் பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. ஏற்கனவே ஒப்பந்தமான திரைப்படங்களும் அவரை விட்டுச் சென்றது. மேலும் அவர் நடித்த அதோ அந்த பறவை போல திரைப்படத்தை யாரும் தயாரிக்க முன்வராததால் கிடப்பில் கிடந்தது. பட வாய்ப்புகள் கிடைக்காததால் வெப்சீரிஸில் நடித்து வந்தார் அமலா பால். இந்நிலையில் அவரின் அதோ அந்த பறவை போல திரைப்படம் ரிலீஸ் செய்யப் படுவதாக செய்தி வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை வி ஸ்கொயர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் ரிலீஸ் செய்வது குறிப்பிடத்தக்கது.