Categories
தேசிய செய்திகள்

“இல்லத்தரசிகளுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி”….. இந்த பொருளின் விலை பயங்கரமா ஏறப்போகுது….!!!!

உற்பத்தி குறைந்துள்ளதால் விரைவில் சீரகத்தின் விலையும் கடுமையாக உயரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உணவு பொருட்கள் முதல் அத்தியாவசிய பொருட்கள் வரை அனைத்து பொருள்களின் விலையும் உயர்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பணவீக்கத்தின் அழுத்தம் பொதுமக்களுக்கு சுமையை தருகிறது. இந்த வரிசையில் தற்போது சீரகத்தின் விலையும் தாறுமாறாக உயரப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் சீரகம் உற்பத்தி கடுமையாக குறைந்த காரணத்தினால் சீரகத்தின் விலை 30 முதல் 35 சதவீதம் உயரும் என்று கிரிசில் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

எகிப்து நாட்டில் நைல் பள்ளத்தாக்கு மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியை சேர்ந்த மசாலாப் பொருள் சீரகம். இன்று இந்தியா, சிரியா, துருக்கி, ஐக்கிய அரபு நாடுகளில் இந்த சீரகம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. உலகின் மொத்த உற்பத்தியில் இந்தியாவுக்கு மட்டும் 70 சதவீதம் பங்கு உள்ளது.  இந்நிலையில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களில் மிளகுக்கு அடுத்தபடியாக சீரகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் தொடங்கிய சீரகச் உற்பத்தி குறைந்துள்ளது. இந்தியாவில் சீரகம் சாகுபடி செய்யப்பட்ட நிலப்பரப்பு 20 சதவீதம் குறைந்து உள்ளதால், இந்த சீரகம் சாகுபடி குறைந்ததாக கிரிசில் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீரகம் விலை 30 முதல் 35 சதவீதம் வரை உயரும் என்று கிரிசில் நிறுவனம் தெரிவிக்கின்றது.

 

Categories

Tech |