Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…..வெளியான செம அறிவிப்பு…!!!!!

திருமலைக்கு செல்ல பக்தர்கள் நாளை (5 ஆம் தேதி) முதல் அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில், உலகப் பிரசித்திப் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, உள்ளூரில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்துச் செல்வார்கள்.  இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து, கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து, கட்டுப்பாடுகளில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டநிலையில், அண்மையில் திருப்பதி திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் சேர்ந்து ஆலோசனை கூட்டம் ஒன்று  நடத்தினர்.

அக்கூட்டத்திற்கு தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தலைமை தாங்கி பேசினார். மேலும் இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து இது குறித்து, தலைவர் சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
திருப்பதி ஏழுமலையானை வழிபட வரும் சாதாரண பக்தர்களை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் விரைவாக தரிசனத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மேலும் புயல் மழையால் சேதமடைந்திருந்த ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை சீரமைப்பு பணிகள் தற்போது முடிந்துள்ளதால், நாளை  (5 ஆம் தேதி) முதல் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை திறக்கப்படுகிறது. எனவே பக்தர்கள் பாத யாத்திரையாக திருமலைக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.3.60 கோடியில் தங்க சிம்மாசனம் தயார் செய்யப்படும்.

இதையடுத்து அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய 2 நடைபாதைகள் வழியாக நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு டைம் ஸ்லாட் முன்பதிவு முறை டோக்கன்கள் விரைவில் வழங்கப்படும். இதையடுத்து திருப்பதி – திருமலை இடையே பேட்டரி பஸ்கள் இயக்கப்பட உள்ளன. வேலூரில் உள்ள தேவஸ்தான தகவல் மையம் மற்றும் கோயில் உள்ள இடத்தில் புதிதாக கோயில் கட்டப்படும். உளுந்தூர் பேட்டையில் ஏழுமலையான் கோயில் கட்ட முதற்கட்டமாக ரூ. 4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, நாளை (5 ஆம் தேதி) திருப்பதி வந்து அங்கு கட்டப்பட்டுள்ள ஸ்ரீநிவாச மேம்பாலம் திறப்பு விழாவில் அவர் கலந்து கொள்வார். மேலும், 2-ஆம் கட்ட மேம்பால பணிகளுக்காக தேவஸ்தானம் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் திருப்பதி அலிபிரி மலை வழிப்பாதை சீரமைப்பு பணிகளுக்காக ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும்   மற்றும் பக்தர்கள் தங்கும் அறைகளுக்காக ரூ. 19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |