மனிதனின் நூலைப்பற்றி ஆச்சரியமான உண்மைகளை தெரிந்து கொள்ளலாம். மனித உடலில் எத்தனை உறுப்புகள் இருந்தாலும் மூளையின் முக்கியத்துவம் பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். இருந்தாலும் உங்களுக்கு தெரியாத பல செயல்முறைகள் மூளையில் நடக்கின்றன. அதுபற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். மனிதனின் மூளை 25 வயது வரை வளரும். முழுமையாக வளர்ந்த மூளை மூன்று கிலோ வரை இருக்கும். பள்ளிப்பருவத்தில் ஆண்களைவிட பெண்கள் தான் அதிகமாக படிப்பார்கள்.
ஆனால் பெண்களை விட ஆண்களுக்கு தான் மூளை பெரிதாக இருக்கும். மனிதனின் மூளையில் 60 சதவீதம் கொழுப்பு மட்டுமே உள்ளது. மூளையில் நியூரான்கள் எனப்படும் சுமார் 100 மில்லியன் நுண்ணிய நரம்பு செல்கள் உள்ளன. போதைப் பொருள் பயன்படுத்தும் போது மூளை அனைத்தையும் மறக்கடிக்க செய்வதில்லை. ஆனால் தற்காலிக நினைவு திறனை மட்டும் இழக்கச் செய்கின்றது.
மனிதனின் மூளை கணினியை விட விரைவாக சிக்கல்களைத் தீர்க்கும் திறன் கொண்டது. அதனைப் போலவே மனித மூளை தகவல்களை 260 MPH வேகத்தில் அனுப்புகின்றது. மூளையின் திசுக்களில் வலி அறியும் தன்மை இல்லை. எனவே மனித மூளையில் மனிதன் விழித்திருந்தாலும் இறுதியில் அறுவை சிகிச்சை செய்ய முடியும். நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தாலும் உங்கள் மூளைக்கு ஓய்வு என்பதே கிடையாது. உறங்கும்போதும் கனவு தேவையற்ற சிந்தனையால் மூளை செயல்பட்டு கொண்டே இருக்கும்.
மூளையில் குறிப்பிட்ட அளவு மட்டுமல்லாமல் எவ்வளவு தகவல்களை வேண்டுமானாலும் நாம் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். மேலும் ஒரு விசித்திரமான உண்மை என்னவென்றால் சத்தமாக படிப்பது குழந்தையின் மூளையின் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. ஆனால் நாம் குழந்தைகளுக்கு அமைதியை கற்றுக்கொடுக்கிறோம். அமைதியை விட சத்தமாக பேசுவது மற்றும் கேள்வி கேட்பதும் குழந்தையின் நினைவாற்றலை வலுப்படுத்தும். மூளை பேசுவதைவிட படங்களை அதிகம் நினைவில் வைத்துக் கொள்ளும்.