கடந்த 1996-ம் ஆண்டு உகாண்டா நாட்டைச் சேர்ந்த ஜோர்தன் கின்யாரா என்ற 6 வயது சிறுவன் தன்னுடைய தந்தை ஒருவருடன் சண்டை போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தார். அந்த நபர் ஜோர்தன் கின்யாராவின் தந்தைக்கு சொந்தமான பூர்வீக நிலத்தை தனக்கு சொந்தமானது என கூறி போலியான பத்திரங்களை தயார் செய்துள்ளார். இந்த போலி பத்திரங்களை நீதிமன்றத்தில் காண்பித்து அந்த நிலத்தை அவருக்கே சொந்தம் ஆக்கிக் கொள்கிறார். அந்த சமயத்தில் ஜோர்தன் கின்யாராவின் தந்தை வேலையிலிருந்து ஓய்வு பெற்றதால் அவரால் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு போதிய அளவிற்கு பணம் இல்லை. இதன் காரணமாகத்தான் ஜோர்தன் கின்யாராவின் தந்தைக்கும் அந்த நபருக்கும் இடையே சண்டை நடந்துள்ளது.
இந்த சம்பவங்கள் அனைத்தும் 6 வயது சிறுவனான ஜோர்தன் கின்யாராவின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. இதனால் ஜோர்தன் கின்யாரா 23 வருடங்கள் விடா முயற்சியுடன் படித்து ஒரு வழக்கறிஞராக மாறினார். அதன்பிறகு ஜோர்தன் கின்யாரா தனது தந்தைக்கு சொந்தமான நிலத்தை ஏமாற்றியவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் பிறகு நீதிமன்றத்தில் திறமையாக வாதாடி தன்னுடைய தந்தைக்கு சொந்தமான பூர்வீக நிலத்தை மீட்டார். இதனால் ஜோர்தன் கின்யாராவின் தந்தை மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இது உகாண்டா நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவம் ஆகும்.