Categories
பல்சுவை

இவருக்கு இணை யாருமே இல்லை…. சாகா வரம் பெற்ற சாகச கலைஞன்…. அது யார் தெரியுமா?….!!!!!

தற்காப்பு கலையை துறையின் மூலமாக உலகிற்கு அதிகம் அறிமுகப்படுத்தியவர் புரூஸ் லீ. கட்டாயம் இவரைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். 1940 ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி ஹாங்காங்கை பூர்வீகமாக கொண்டதாக பாட கருக்கும் ஜெர்மன் வம்சாவழி தாய்க்கும் அமெரிக்காவில் பிறந்தவர் புரூஸ் லீ. சிறு வயதிலிருந்தே தற்காப்பு கலைகளை கற்றுக் கொண்டார். பள்ளிப்படிப்பை இவர் விரும்பவில்லை. மேற்கத்திய குத்து சண்டையையும் பாரம்பரிய குங்ஃபூவையும் கற்றுத் தேர்ந்தார்.

இரண்டு கைகளையும் இணைத்து புதுவிதமான ஒரு கலையை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அவர் குழந்தையாக இருக்கும்போதே திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. 5 அடி 8 அங்குல உயரம் கொண்டிருந்த ப்ரூஸ் லீயின் உடல்திறன் அனைவரையும் வியக்க வைத்தது. அவரின் கைகள் இயங்கும் வேகம் வலிமை போன்றவற்றில் நிகராக சமகாலத்தில் வேறு யாருமில்லை என்ற தற்காப்பு கலை நிபுணர்கள் கூறுகிறார்கள். அவருக்கு ஏராளமான திறமைகள் இருந்தன. 1964ஆம் ஆண்டு ப்ரூஸ்லீ நிகழ்த்திய சாகசங்கள் பலரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

ஆள்காட்டி விரலை மட்டும் தரையில் ஊன்றியபடி புஷ்-அப் பயிற்சியை அவர் மேற்கொண்டபோது பார்வையாளர்கள் அனைவரும் அதனை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். இவரின் உடல் வலிமைக்கு அடிப்படையான காரணங்கள் மற்றொன்று அவரது உணவு பழக்கம். எந்த ஒரு நிலையிலும் சுவை விருந்திற்காக சத்து இல்லாத உணவுகளை அவர் சாப்பிட்டது கிடையாது. இப்படிப்பட்ட பல்வேறு திறமைகளை கொண்டிருந்த புரூஸ் லீ 1973ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவர் மறைந்தாலும் அவரின் புகழ் இன்றளவும் உலக அளவில் பேசப்பட்டு வருகிறது. அவர் பதித்த தடம் இன்னும் மறையவில்லை.

Categories

Tech |