Categories
பல்சுவை

பச்சோந்தி உண்மையிலேயே நிறத்தை மாற்றுமா?…. இதோ பலருக்கும் தெரியாத சுவாரசிய தகவல்….!!!!

பச்சோந்தி நிறத்தை மாற்றும் என்று அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை நேரில் கூட நீங்கள் பார்த்திருக்கலாம். பச்சோந்திகள் அவற்றின் நிறம் மாற்றும் இயல்புக்கு மிகவும் பிரபலமானவை. ஆனால் உண்மையிலேயே பச்சோந்தி எப்படி நிறத்தை மாற்றுகிறது? எதனால் மாற்றுகிறது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.

உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் தனித் தனி சிறப்புகள் உள்ளது. அதனைப் போல பச்சோந்திக்கு தனி சிறப்புகள் உள்ளன. தனது பாதுகாப்பிற்கு ஏற்ப அவற்றின் நிறத்தை மாற்றும் என்று நம்பப்படுகின்றது. வேட்டையாடுபவர்கள் ஐ தவிர்ப்பதற்காக பச்சோந்தி அதே நேரத்தில் தன்னை காப்பாற்றுகிறது. ஆனால் உண்மையாக பச்சோந்திகள் தங்கள் உணர்வுக்கு ஏற்ப நிறத்தை மாற்றுகின்றன. கோபம், ஆக்ரோஷம், ஒருவருக்கொருவர் பேசுவதற்கும்,மற்ற பச்சோந்தி களுக்கு தங்கள் மனநிலையை காட்டுவதற்கும் பச்சோந்திகள் தங்கள் நிறத்தை மாற்றுகின்றன.

மேலும் ஆராய்ச்சியின்படி பச்சோந்திகள் பெரும்பாலும் அவற்றின் நிறத்தை மாற்றுவது மட்டுமின்றி ஆபத்து ஏற்பட்டால் அவற்றை அளவையும் மாற்றுகின்றன. தங்கள் ஆபத்தை உணரும் போது தேவைப்பட்டால் பச்சோந்திகள் அவற்றின் அளவை சுருக்கிக் கொள்ள முடியும். பச்சோந்தியின் உடலில் போட்டானிக் படிக எனப்படும் ஒரு அடுக்கு உள்ளது. இதுதான் சூழலுக்கு ஏற்ப நிறத்தை மாற்ற உதவுகின்றது. இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும் பச்சோந்திகள் ஏன் தங்களது நேரத்தை மாற்றுகின்றன என்பது.

Categories

Tech |