பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவர் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் குறித்து பார்க்கலாம். கடந்த 1947-ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி ஆஸ்திரியாவில் அர்னால்டு ஸ்வார்ஸ்நேகர் பிறந்தார். இவர் 1983-ம் ஆண்டு அமெரிக்காவின் குடியுரிமையைப் பெற்றார்.
இவர் தன்னுடைய 15 வயதிலிருந்தே உடற்கட்டு பயிற்சிகளை செய்து வந்தார். இவர் தன்னுடைய 20-வது வயதில் முதன் முறையாக உலக ஆணழகன் பட்டத்தை வென்றார். அதன்பின் 7 முறை ஒலிம்பியா ஆணழகன் பட்டத்தை வென்றுள்ளார். இதனையடுத்து அர்னால்டு உடல்கட்டு சம்பந்தப்பட்ட நிறைய நூல்களை எழுதியுள்ளார். இவர் ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்தபோது புகழின் உச்சிக்கே சென்றார் எனக் கூறலாம்.
இவர் கடந்த 2003-ஆம் ஆண்டு அமெரிக்காவில் ரிபப்ளிக் கட்சியின் சார்பாக போட்டியிட்டு அமெரிக்க கவர்னராக மாறினார். இவர் கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநராக 2 முறை பதவி வகித்தார். இவருக்கு திருமணமாகி மரியா என்ற மனைவியும், 4 குழந்தைகளும் இருக்கின்றனர்.
இந்நிலையில் ஹம்வீ என்ற வாகனத்தை வாங்கிய முதல் அமெரிக்க தனி குடிமகன் என்ற பெருமையும் அர்னால்டை சேரும். இவர் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்கும் போது 2 முறை அதிக சம்பளம் வாங்கிய காரணத்துக்காக காஸ்ட்லி நாயகன் என அழைக்கப்பட்டார். இவர் 300 கிலோ வரை எடை தூக்கும் அளவிற்கு திறன் கொண்டவர். மேலும் அர்னால்டு உடலை மிக கட்சிதமாக வைத்திருப்பதால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.