Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“திருமணமாகாத இளம் பெண் 7 மாத கர்ப்பம் என்பதை கண்டறிந்து கூறியதால்”… கிளினிக் உடைத்து சூறையாடல்… டாக்டருக்கு கொலைமிரட்டல்…!!!

திருமணமாகாத இளம்பெண் 7 மாத கர்ப்பம் என்பதை கண்டறிந்து டாக்டர் தெரிவித்ததால் கோபத்தில் கிளினிக்கை 4 பேர் உடைத்து சூறையாடியனார்கள்.

கடலூர் மாவட்டம், கூத்தம்பாக்கம் தெய்வசிகாமணி நகரில் வசித்து வருபவர் டாக்டர் வித்யா. இவர் அதே பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வருகின்றார். இவர் நேற்று முன்தினம் இரவு பணியில் இருக்கும் போது ஆயிபேட்டையில் வசித்த இளம்பெண்(22) ஒருவரை வயிற்று வலி என்று அவரது உறவினர்கள் அழைத்து வந்துள்ளார்கள். அந்த இளம்பெண்ணிற்கு திருமணம் ஆகவில்லை. அப்போது அந்த இளம்பெண்ணை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏழு மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என்று அவரது உறவினர்களிடம் கூறினார்.

இதைக் கேள்விப்பட்ட அப்பகுதியில் வசித்த ஆனந்தகுமார், அவருடைய தம்பி திருநாவுக்கரசு, நண்பர்கள் சதீஷ்குமார், வீரமணி ஆகிய 4 பேரும் கிளினிக்கு வந்து அங்கு பணிபுரிந்த செவிலியர் ஆனந்தியை தாக்கியுள்ளார்கள். மேலும் கிளினிக்கில் இருந்த நாற்காலிகளை உடைத்தார்கள். இதை தட்டிக்கேட்ட மருத்துவரை கொலை செய்து விடுவதாக மிரட்டினார்கள். இதுகுறித்து மருத்துவர் வித்யா கடலூர் திருப்பாதிரிபுலியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இப்புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஆனந்தகுமார் அந்த இளம் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதும், அதனால் அந்த பெண் கர்ப்பமானது தெரியவந்துள்ளது. இந்த உண்மையை மருத்துவர் கூறியதால் கோபத்தில் ஆனந்தகுமார் உட்பட நான்கு பேர் தகராறு செய்துள்ளார்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |