Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வியாபாரத்தில் நஷ்டம்… கடனை அடைக்க நகை திருட்டு… கைதான காதல் ஜோடிகள் பரபரப்பு வாக்குமூலம்…!!!

ஆன்லைன் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை திரும்ப அடைக்க நகை திருட்டில் ஈடுபட்டதாக காதல் ஜோடிகள் வாக்குமூலம் கொடுத்தனர்.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் கிழக்கு வீதியில் வசித்து வருபவர் காளியம்மாள்(65). இவர் கடந்த மாதம் 28-ம் தேதி அன்று தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையம் அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேர் முகவரி கேட்பது போல நடித்து காளியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த  5 1/2 பவுன் நகையை பறித்து விட்டு தப்பித்து சென்று விட்டார்கள்.

இதுகுறித்து தொண்டாமுத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது, அதில் சோமையம்பாளையம் அருகில் காஸ்மா கார்டனை சேர்ந்த இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பிரசாத்(20) என்பதும், கோவை சுங்கத்தில் வசித்த அவருடைய காதலி 20 வயதுடைய தேஜாஸ்வினி(20) என்பதும் தெரியவந்துள்ளது. அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

அப்போது கைதான காதல் ஜோடிகள் கூறியதாவது, பிரசாத் ஆன்லைனில் பொருட்களை வியாபாரம் செய்து வந்துள்ள நிலையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக அளவில் கடன் வாங்கி அதை அடைக்க முடியாமல் தனது வீட்டிலும் நகையை திருடினார். இதனை அடுத்து தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகையை பறித்து சென்றுள்ளார். இதை தனது காதலியிடம் தெரிவித்து ஏற்றுக்கொள்ள வைத்தார்.

இதைத்தொடர்ந்து அவர்கள் கடந்த 28-ஆம் தேதி தொண்டாமுத்தூர் பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த காளியம்மாளிடம் நகையை பறித்து விட்டு பைக்கில் தப்பித்து சென்றனர். அந்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவானதில் அந்த காதல் ஜோடிகள் சிக்கிக் கொண்டார்கள். காதல் ஜோடிகள் முதன்முறையாக நகை பறிப்பில் ஈடுபட்டு சிக்கியதால் பிரசாத்தை காவலில் எடுத்து விசாரிக்க இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தார்கள்.

Categories

Tech |