இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாய்பாபா காலனியில் கூலித் தொழிலாளியான ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஐஸ்கிரீம் கடைக்கு சென்றுள்ளார். அங்கு வேலை பார்க்கும் ஒரு இளம்பெண்ணிடம் ராஜ்குமார் பிறந்தநாள் கேக் வேண்டும் என கேட்டுள்ளார். இதனால் அந்த இளம்பெண் கேக் இருக்கும் இடத்திற்கு ராஜ்குமாரை அழைத்து சென்றுள்ளார்.
இந்நிலையில் கடையில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி கொண்டு ராஜ்குமார் திடீரென இளம்பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் அலறி சத்தம் போட்டுள்ளார். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து சென்று ராஜ்குமாரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.