கோடைவெயில் தொடங்கி மக்களை வட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகின்ற 29–ந்தேதி வரை 25 நாட்கள் நீடிக்கிறது. இந்த கால கட்டத்தில் வெயில் வாட்டி வதைக்கும்.கோடை காலம் தொடங்கிவிட்டதால் தண்ணீர் தாகம் அதிகரிக்கும். மேலும் காய்ச்சி வடிகட்டிய குளிர்ந்த நீர், மோர், உப்பு போட்ட எலுமிச்சை பழச்சாறு குடிக்கலாம், வெள்ளரி, தர்பூசணி மற்றும் பிறவகை பழங்கள் சாப்பிடலாம்.
இந்நிலையில் கோடை காலம் முடியும் வரை எங்கு சென்றாலும் கையில் தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்லுமாறு அமைச்சர் சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். அதாவது தாகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வெயில் காலத்தில் போதிய அளவு நீர்ச்சத்து மிகுந்த பானங்களை அருந்த வேண்டும். மேலும் உடல் முழுவதும் மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வெயிலில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், மது அருந்துவதை குறைத்துக் கொள்ளும்படி வலியுறுத்தி உள்ளார்.