Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தாறுமாறாக ஓடி வீட்டிற்குள் புகுந்த லாரி… ஓட்டுநர் பலி… சோக சம்பவம் …!!!

லாரி விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், பழம்பாக்கம் அருகில் நேத்தாம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் ஆசீர்வாதம். இவருடைய மகன் டிப்பர் லாரி ஒட்டுநரான வேளாங்கண்ணி(37). இவர் கடந்த 1ஆம் தேதி மாலை பிரம்மதேசத்திலிருந்து டிப்பர் லாரியில் ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு மரக்காணம் மார்க்கமாக சென்றார். அப்போது ஆலங்குப்பம் அருகில் வரும்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கின் மீது மோதியது.

அதன்பின் அந்த பைக்கை  தள்ளிவிட்டு ரோட்டின் ஓரத்தில் இருந்த வீட்டிற்குள் பாய்ந்தது. இதனால் படுகாயம் அடைந்த வேளாங்கண்ணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். லாரி உள்ளே பாய்ந்ததால் வீட்டின் முன்பக்கம் சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து புகாரின் அடிப்படையில் பிரம்மதேசம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |